பெருநிலப்பரப்பில்.... (ஞான்)

(ஆத்தா நான் ஊருக்குப் போனேன்...

ஏது...? உனக்கெதடா ஊரு...? 1 வருசமாவது ஒரு இடத்தில நிரந்தரமா இருந்திருக்கிறியா...? நாடோடி யாச்சே நீயி .....? இப்படியான சில அர்த்தமுள்ள கேள்விகளிலிருந்து விடுபட்டு.......)

வட்டக்கச்சி்க்கு போனேனுங்கோ....
கொழும்பிலிருந்து அடிக்கடி யாழ்ப்பாணம் போகும் போது கிளிநொச்சி காக்க கடைச் சந்தி மின்னிக்காட்டிக்கொள்ளும். அப்ப அவ்வப்போது அந்த நாள் ஞாபகங்கள் வந்து போவதுண்டு.

இம்முறை காக்கா கடைச்சந்தியிலேயே ஷாட்சாத் இலங்கன் நிக்கிறன்....
ஓட்டோகிராப் சேரன் போல.....(மனதிற்குள் ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே....பாடல்) சிட்டுவேசனுக்கு பொன்டிங் தாடியும் கண்ணாடியும் தான் குறை.

வவுனியாவிலிருந்து பஸ் மீது ஏற்றிக்கொண்டு வந்த மிதிவண்டியை கீழே இறக்கி .- மன்னிக்க "உந்துருளியை" இறக்கி பெடல் மீது விசையைப் பிரயோகித்து ஊரை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கிறேன்.
(பெருநிலப்பரப்பில் இறங்கியதுமே நல்ல தமிழ் தானாகவே வந்துவிடுகிறது)
கிளிநொச்சி குளத்தை கடந்து ஐந்தடி வானை (5 " வான்)அண்மித்துவிட்டேன். ஐந்தடி வானை அண்மித்ததுமே அந்த நாள் ஞாபகங்கள் மலரும் நினைவுகளாக...

டோய்ங்... டோய்ங்...
அப்ப வெதுப்பி , குதப்பி, ஈருளி, உந்துருளி என தமிழில் சொற்போர் புரிந்த போது அட்துடன் file என்பதற்கு தகுந்த தமிழாக 'பாவாடை" என்பதை ஆராய்ந்து பயன்படுத்தி வந்த பொற்காலத்தில் "ஐந்தடி வானில் ஆங்கில வெள்ளம் " என்கிற வித்தியாசமான விளம்பரத்தில் மூழ்கி
ஆங்கிலம் படிக்க வட்டக்கச்சியிலிருந்து உந்துருளியை வலித்த ஞாபகங்கள்..

செயன்முறை ஆங்கிலம்.
வேலி, மரங்களுடன் ஆங்கிலம் கறந்தது, அல் ஆங்கில வகுப்பில் (இரவு) ஜெயந்தன் "f " உச்சரிக்க மெழுகுதிரி அணைந்து போன கலக்கல் நிகழ்வுகள் மலரும் நிளைவுகளாக...

இந்த வகுப்பில் நான் உட்பட அனைவரும் " broken english" தான் ஆயினும் நமது கேள்விகள் ஆங்கில உரையாடல்கள் மற்றவருக்கு விளங்கி விடுவது தான் ஆச்சரியம்.

உந்துருளி சக்கரத்துடன் ஐந்தடி வான் நிளைவுகள் உருண்டு இப்ப உந்துருளி பன்னங்கண்டி பாலத்தை அண்மித்துவிட்டது... இங்கிருந்து வட்டக்கச்சி ஆரம்பம்..
வட்டக்கச்சி ஆரம்பத்தின் அடையாளமாக இங்குள்ள farm ஐ கொள்ளலாம். மன்னிக்க _
ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணை

இந்த farm ல எத்தினை "யோகற்"களை ஆட்டையப் போட்டிருப்பம்.
விவசாயக் கண்காட்சிகளின் போது G.T.M.S ஐ பிரதிநிதித்துவப்படுத்தி பொருட்களை ஆட்டையப்போடுவது சிங்கன் தலைமையிலான குழுவாகத் தானிருக்கும்.

அத்தோடு கண்காட்சியில் காட்சிக்கு விட்டிருந்த அவுஸ்ரேலியன் மாட்டில் முதன் முதல் பால் கறந்து அவுஸ்ரேலியா பால் குடித்த பெருமையும் எம்மையே சாரும்.

இப்ப உந்துருளி உந்தி வட்டக்கச்சி மகாவித்தியாலத்தை நெருங்கிவிட்டது..

வட்டக்கச்சி பள்ளியில் அனுமதி பெற்ற முதல் நாளே என்னையும் தருசனையும் அதிபர் ஒரு நான் லீவு கொடுத்து அனுப்பிய சம்பவம் இன்னமும் பச்சையாக நினைவில் உள்ளது. (மீசையை அண்மித்த மழமழப்பான தசை மற்றும் கைநரம்புகள் யாவும் கப்டன் விஜயகாந்தை போல் துடிக்கிறது)

நிற்க....
இப்ப நான் வட்டக்கச்சி சந்தியில் சங்கக்கடையில் " மினரல் வாட்டர் ' குடிக்கிறனுங்கோ...
அடப்பாவி.... தாயைப் பழித்தாலும் தண்ணியப் பழிக்கப்படாது எண்டு ஒரு அட்டு டயலாக்கை அடிச்சிட்டு வாய்க்கால் தண்ணிய அள்ளி விழுங்கிற பன்னி எல்லாம் இப்ப "மினரல் வாட்டர் "குடிக்குதோ...? என கவுண்டர் பாணியில கூடத்திரிந்தவர்கள் கேட்கலாம்..

ஆனால் உண்மை யாதெனில் see the வாய்க்கால்ஆத்தினிலே தண்ணியில்லே...

சப்பையோ... ரைட்டு விடு...

மீண்டும் வலிக்கிறேன் .. வீதியோரம் உள்ள தலையில்லாத தென்னைகளை தலை உயர்த்தி பார்க்கிறேன் -

ஒத்தப்பனை, தலையிழந்த தென்னை என காசியானந்தன் பாணியில் உணர்சிக் கவிதைகள் பொங்குது...இந்த மதவடியில் எத்தனை தரம் குளித்திருப்பம்.
பல்டி அடிச்சிருப்பம் .. ஹி.. ஹி... பலடி அடிக்க முயற்சித்திருப்பன்.. கணுக்கால் அளவு தண்ணிக்குள்ள உடம்பை தாழ்த்தி கழுத்தளவு தண்ணிக்குள்ள நிக்கிற மாதிரி சீனை போடுவது எவ்வளவு கடினம்.

அதெல்லாம் அனுபவிச்சவனுக்குத் தான் தெரியும்.
இந்த மதரிரி சீனை போடாட்டி மதவுக்கடியில் ( ஆழம் கூடிய பகுதி ) நீச்சல் தெரிங்சவங்கள் தாட்டுப் போடுவாங்கள்.

இந்த ஐயனார் கோவில் ஆலமரம் தான் சின்ன சின்ன சங்கங்கள் கூடுமிடம் .

இந்த ஆலம் விழுதில ஆயிரத்தில் ஒருவன் எம். ஜி ஆர் போல தலைகீழாக தொங்கி சிந்து பாடுற சுகம் இருக்கே.... ஆ..

ஐயப்பன்
அண்ணா சூரன் போருக்கு ஸ்பிரேயருக்குள்ள மண்ணென்ணெயை விட்டு தீப்பந்தத்துக்க ஸ்பிரே பண்ண சூரன் வாயிலிருந்தது நெருப்பு கக்குவதைப் போலவே இருக்கும். சூரன் ஆட்டுவதில் ஐயப்பன் அண்ணைக்கு நிகர் அவரே தான்.

சூரனின் வயித்துக்கால வரும் சேவலின் ஒரு இறகு கூட கையில் அம்பிடாது..
(பல வருசமாக ஒரே கோழி தான் பறக்க விடுவதாக தகவல்)
இப்படி பல நிகழ்வுகளை (பந்தல் செலவில்லாமல்) தனது அகல விரித்த கிளைப்பரப்புக்கடியில் நடாத்திய ஆல மரம் இப்ப ஒத்தையா நிக்குது.

இனி ஆல மரம் அரசமரமா மாறினால் தான் மதிப்பு கூடவாகவிருக்கும்...
ஹி.. ஹி..
பதிவு நீண்டுபோச்சு மிகுதி அடுத்த பதிவில்....

10 comments:

கன்கொன் || Kangon புதன், மே 05, 2010 5:19:00 பிற்பகல்  

அப்பன் இலங்கா...

ஊர் சென்று வந்த மகிழ்ச்சியில் இருக்கிறீர் போல..

என்னதான் இரந்தாலும் சொந்தவூர் போய்ற்று வாற சுகமே தனி தான்..

உங்கட முன்பைய ஞாபகங்கள சுவாரசியமாச் சொல்லியிருக்கிறீர்.

ஆனா ஒரு சந்தேகம்,
உந்துருளி எண்டா மோட்டாள் வண்டி தானே?
ஈருருளி எண்டாத்தானே மதிவண்டி அல்லது சைக்கிள்?
அப்பிடியில்லயா? :-o

(தமிழில் ஞான் பெற்ற துன்பம் இங்கயும் நிக்கிறமாதிரி இருக்குது...
ஹி ஹி... ;)
கவனமப்பன்... பிறகு அழப்படாது... :D )

Subankan புதன், மே 05, 2010 6:35:00 பிற்பகல்  

அப்பா இலங்கா...

மலரும் நினைவுகள் நல்லாருக்கப்பா

அடுத்த பகுதியை எதிர்பார்த்து ஆவலுடன்...

பா. சுபாங்கன்

Bavan புதன், மே 05, 2010 11:40:00 பிற்பகல்  

ஆஹா.. ஓஹோ.. சூப்பரா போய் வந்து மகிழ்ச்சியில் இருக்கிறீங்க போல..:p

அடுத்தது எப்போ... அதுவும் ஆஹா.. ஓஹோ.. சுப்பரா.. இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

ம.வேணுதன் வெள்ளி, மே 07, 2010 2:07:00 முற்பகல்  

தம்பி லவன், அருமையாய் இருக்குதப்பு.
எல்லாத்தையும் படிக்கும்போது நானே நேர்ல போனமாதிரி ஒரு மகிழ்ச்சி, என்னால போகமுடியலையே எண்டுற வருத்தம், இப்பிடி எல்லாம் கலந்து பெயர் குறிப்பிடமுடியாத ஒருவித உணர்வு ஏற்படுது. உம்மட உரைநடைக்கு சிரிப்பு வந்திருக்கோணும், ஆனா வரேல (குறை நினைக்காதையும்).
பகிர்வுக்கு கோடானுகோடி நன்றி. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மேலதிகமான புகைப்படங்கள் இருந்தால் எமது தளத்தில் ( http://vaddakkachchi.ning.com/ ) பதிவு செய்வீர் என எதிர்பார்க்கிறேன்.

இலங்கன் வெள்ளி, மே 07, 2010 9:44:00 முற்பகல்  

கன்கொன் || Kangon கூறியது..

//ஊர் சென்று வந்த மகிழ்ச்சியில் இருக்கிறீர் போல..//
யேஸ்.. யேஸ் யாதும் ஊரே யாவரும் கேளீர்...

//என்னதான் இரந்தாலும் சொந்தவூர் போய்ற்று வாற சுகமே தனி தான்..//
உண்மை தான்.. முதல் முதல் படித்த பள்ளி... முதல் வகுப்பெடுத்த பாமினி ரீச்சர்.... ம்...

//ஆனா ஒரு சந்தேகம்,
உந்துருளி எண்டா மோட்டாள் வண்டி தானே?//

ஆகா வந்துட்டாய்யா...
உண்மை தான் இருப்பினும் நான் உந்துருளி என எழுதியதன் காரணம் வாசகர்களின் புலமையை பரிசோதிக்கவே..
க.க.போ..
கச்சிதமாக கெளவிக்கொண்டீர்...
திருத்தி விடுகிறேன்...
சப்பா....

நன்றி கங்கோன்......

இலங்கன் வெள்ளி, மே 07, 2010 9:50:00 முற்பகல்  

Subankan கூறியது..
//அப்பா இலங்கா...//
ஏது அப்பாவா... நாங்க யூத்து... இளைஞன்.... அப்பாவாக்கப்படாது...ஓகே...

//மலரும் நினைவுகள் நல்லாருக்கப்பா//
நன்றியண்ணா.. இருப்பினும் கூடத்திரிந்தவர்கள் வாழ்ந்தவர்கள் தற்போது இல்லை என்பது தான் வருத்தமளிக்கிறது...

நன்றியண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..

இலங்கன் வெள்ளி, மே 07, 2010 9:53:00 முற்பகல்  

Bavan கூறியது...

//ஆஹா.. ஓஹோ.. சூப்பரா போய் வந்து மகிழ்ச்சியில் இருக்கிறீங்க போல..:p//
ஆகா கட்சி சேர்ந்திட்டாங்கய்யா... சுப்பரும் பவனும்...
மகிழ்சியில்லை பவன் வெறுமையாகவிருக்கிறது...

//அடுத்தது எப்போ... அதுவும் ஆஹா.. ஓஹோ.. சுப்பரா.. இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..//
நிச்சயமாக..
ஆனால் நேரம் தான் இல்லை பதிவிட... முயற்சிக்கிறேன்.. நன்றி கருத்துக்கும் வருகைக்கும்..

இலங்கன் வெள்ளி, மே 07, 2010 10:03:00 முற்பகல்  

ம.வேணுதன் கூறியது...
//தம்பி லவன், அருமையாய் இருக்குதப்பு.
எல்லாத்தையும் படிக்கும்போது நானே நேர்ல போனமாதிரி ஒரு மகிழ்ச்சி, என்னால போகமுடியலையே எண்டுற வருத்தம், இப்பிடி எல்லாம் கலந்து பெயர் குறிப்பிடமுடியாத ஒருவித உணர்வு ஏற்படுது//
அண்ணா தங்கள் வருத்தம் புரிகிறது...
ஏதோ..என்னால் முடிந்தளவு பதிவிட முயற்சித்தேன்....அவ்வளவுதான்..

//உம்மட உரைநடைக்கு சிரிப்பு வந்திருக்கோணும், ஆனா வரேல (குறை நினைக்காதையும்).//
தங்கள் மனநிலை புரிகிறது... கூடத்திரிந்தவர்கள் நெருக்கமானவர்கள் தற்போது எம்முடன் இல்லாதது வருத்தம் தான்...
வட்டக்கச்சி உயிரிழப்புகள் மிக அதிகம்..மீளக்குடியமர்வின் பின் மக்கள் தொகை 500 ஐ தாண்டுமோ தெரியாது...

//பகிர்வுக்கு கோடானுகோடி நன்றி. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//
நிச்சயமாக.. நேரம் கிடைத்தால் உடனே இடுகிறேன்..

//மேலதிகமான புகைப்படங்கள் இருந்தால் எமது தளத்தில் ( http://vaddakkachchi.ning.com/ ) பதிவு செய்வீர் என எதிர்பார்க்கிறேன்.//
அவசரமாக போய் வந்ததால் படங்கள் நின்று நிதானமாக எடுக்கவில்லை..
கொஞ்சப் படங்கள் பதிவேற்றியுள்ளேன் பாருங்கள்..

நன்றி கருத்துக்கும் பகிர்விர்க்கும்

s.k.guna புதன், ஜூலை 21, 2010 2:55:00 பிற்பகல்  

தயவு செய்து சென்னைத் தமிழை கைவிடவும்

Ramesh Ramar வியாழன், ஜூன் 07, 2018 1:28:00 பிற்பகல்  

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.