2010 பரபரப்பும், கிளிநொச்சி பேயும்

2010 தொடக்கமே பல பரபரப்பு…
சூரிய கிரகணத்தில் தொடங்கி வேற்றுக்கிரக வாசி, மாயமான வெளிச்சங்கள் வரை..

இது வரையும் தோன்றிய கிரகணங்களை விட மிகத்தெளிவாகத் தெரிந்தது இம்முறை கிரகணம்.
இம்முறை சூழலின் மந்தமான நிலையிலேயே கிரகணத்தை உணரமுடிந்தது.

கிரகணம் தோன்றிய அந்நாளில் அதற்கான விளக்கங்களும், சாத்திரம், சம்பிரதாயங்கள் என அன்றைய தினம் ஒரே பரபரப்பு.

சில கோவில்கள் கிரகண நேரத்தில் திறக்கக் கூடாது என பூட்டப் பட்டிருந்ததும், சில கோவில்களில் விசேட பூசைகள் எனவும் ஒவ்வொரு கோவில்களும் தங்களுக்குத் தாங்களே புதிய சாத்திரங்களையும் வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

இன்னொரு சாத்திரி கிரகண நேரத்தில் “ உணவு கூடாது” என சமயச்சாத்திரங்களுக்கும் விஞ்ஞானத்திற்குமான ஒற்றுமைகளை எடுத்துக்காட்டி எனது அன்றைய மதிய உணவுக்கு தடா போட்டது என பல சமாச்சாரங்கள்.

ஆன்றைய நாள் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே புதிய புதிய சாத்திரங்களை சொல்லிக்கொண்டதும், ராகு காலங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதும் என கிரகண நாள் கடும் கலகலப்பு..

படம்.


இது ஓய்ந்த பின் வேற்றுக்கிரக வாசிகள், மாயமான வெளிச்சற்கள் என பல அமானுஸ்யங்கள்….

ஒரு சாரார் பறக்கும் தட்டு எனவும், இன்னொரு சாரார் சாத்தான்களின் சதி இவையனைத்தும் எனவும் வரையறுத்தனர்.
இது போதாது என பதிவர் சந்ரு அண்ணனும் காலடித் தடங்களை ஆதாரம் காட்ட பதிவுலகும் பரபரப்பு…

புpன்னர் இவற்றுக்கு விளக்கம் கொடுக்க, ஆதாயம் தேட முனைந்த சிலர் கிரகமாற்றங்கள், உலக ருத்ரத்தை எடுத்துக் காட்டி, மேலும் வேற்றுக்கிரக வாசிகள் கிரகங்களின் அழிவை உணர்ந்ததால் தமக்கு பாதுகாப்பு தேடி வேற்றுக்கிரகத்துக்கு இடம்பெயர முனைகின்றனர் என விஞ்ஞானிகளை மெச்சும் அளவுக்க விளக்கம் கொடுத்தனர்.

இன்னும் சிலர் சாத்தான்களின் சதி தான் இவையனைத்தும், சுனாமி போன்ற இயற்கை அழிவுகளை எடுத்துக்காட்டி இவை யாவும் சாத்தான்களின் சதி பூலோகத்திற்கு சாத்தானின் அச்சுறுத்தல் எனவே எமது மதத்திற்கு வந்து பிரார்தனையில் ஈடுபடுங்கள் 5 கிலோ சீனியும், மாவும் தருகிறோம் என பிரசாரம் செய்கின்றனர்.

ம் …..


இது இப்படியிருக்க
மீள்குடியேறிய மக்கள் பல பேய்களை தமது வீடு, வளவுகளை சுத்தப் படுத்தும் போது கண்டார்களாம்….


இனி மீள்குடியேற்றத்தின் பின் இந்த பேய் பிசாசுகளை வைத்து எத்தனை திருடர்களும், காவலர்களும் தமது “திருட்டு”விளையாடல்களை நடாத்தப் போகிறார்களோ…?

பேயை வைத்து பேய்களின் கூ+றையாடல்கள் இடம்பெற வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும்
பேய் இருக்கா? இல்லையா? அது வாறதுக்கு முன்னால ஏதாவது அறிகுறி தெரியுமா? ஏல்லாப் பேய்க்கும் ஒரே வடிவம் தானா?...

அதே சந்ரமுகி கேள்வி…?

6 comments:

கன்கொன் || Kangon புதன், பிப்ரவரி 03, 2010 12:24:00 பிற்பகல்  

அண்ணே.... எல்லாம் சுத்துமாத்து....

சும்மா படிக்காத சனங்கள ஏமாத்தப் பாக்கிறாங்கள்.....

கேக்கிறவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஏரோ பிளேன் ஓடுமாம் எண்டு சும்மாவா சொன்னாங்கள்?

புல்லட் புதன், பிப்ரவரி 03, 2010 1:23:00 பிற்பகல்  

எமது மதத்திற்கு வந்து பிரார்தனையில் ஈடுபடுங்கள் 5 கிலோ சீனியும், மாவும் தருகிறோம் என பிரசாரம் செய்கின்றனர்.//

ஹாஹாஹ! எளிய சவங்கள் திருந்தாதுகள்..

Subankan புதன், பிப்ரவரி 03, 2010 6:14:00 பிற்பகல்  

ம், இன்ட்றஸ்டிங்

இலங்கன் வெள்ளி, பிப்ரவரி 05, 2010 5:33:00 பிற்பகல்  

// கன்கொன...//


//அண்ணே.... எல்லாம் சுத்துமாத்து

சும்மா படிக்காத சனங்கள ஏமாத்தப் பாக்கிறாங்கள்//.

கேக்கிறவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஏரோ பிளேன் ஓடுமாம் எண்டு சும்மாவா சொன்னாங்கள்?ஃஃ

அப்பு எல்லாம் ஓக்கே...

திருப்பி திருப்பி இப்பிடி எல்லாரும் படித்தவர்கள் உட்பட சொல்லும் போது அதில ஏதோ இருக்கிற மாதிரியான மாயை தோன்றுகிறது.

திட்டவட்டமாக அப்பிடி ஒன்றும் இல்லை என நிருபிக்கும் வரை இந்த விளையாட்டுக்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். ஆனால் ஒன்று நல்லது ஒன்று இருக்குது எண்டால் அது கெட்டது ஒன்று இருந்த படியினால் தானே?.... எனவே கொஞ்சம் ....

இலங்கன் வெள்ளி, பிப்ரவரி 05, 2010 5:36:00 பிற்பகல்  

//புல்லட் //

//எமது மதத்திற்கு வந்து பிரார்தனையில் ஈடுபடுங்கள் 5 கிலோ சீனியும், மாவும் தருகிறோம் என பிரசாரம் செய்கின்றனர்.//

//ஹாஹாஹ! எளிய சவங்கள் திருந்தாதுகள்..//

ம்....
இது மட்டுமா மதமாற்றங்கள் திணிப்புகள் தொடர்பாக எவ்வளவு கேவலங்கள்....
ம்...

இலங்கன் வெள்ளி, பிப்ரவரி 05, 2010 5:38:00 பிற்பகல்  

//Subankan//

//ம், இன்ட்றஸ்டிங்//

அண்ணா............

நான் ஒரு திகிலா டெரரா எழுத அதுக்கான தகுந்த ரியாக்சன் உங்ககிட்ட இருந்து வரேல்ல.

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.