தும்மல் காதல்

யான் எனது வழமைக்கு மாறான எனது செயற்பாடாக புத்தகம் ஒன்றை வாசித்த போது (நறுந்தமிழ்) நறுந்தமிழ் என்பதை கவனமாக உச்சரிக்கவும். அப்புத்தகத்தில்தும்மலும் காதலும்என, திருக்குறளில் இடம்பெற்ற குறள்களுக்கான விளக்கத்தை ஒரு சிறு கதையாக நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

திருக்குறளில் இவ்வாறான சுவையான அம்சங்கள் இருப்பதை இப்புத்தகத்தை வாசித்ததன் பின்னரே அறியக்கிடைத்தது.

திருக்குறளில் இவ்வாறான அம்சங்களும் இருக்கிறது எனத் தெரிந்திருந்தால் சிங்கம் முதலாம் வகுப்பிலிருந்தே திருக்குறளை தினமும் பயின்றிருக்கும். (5ம், 6ம் வகுப்பு ஆசிரியர்களையும் நான் கடுமையாக சாடுகிறேன். சிறு வயதிலே அகர முதல என்பதை நிறுத்தி இன்பத்துப்பால், காமத்துப்பால் குறள்களை எமக்கு கற்பித்திருந்தால் 1330 குறள்களையும் நான் மிகக் கவனமாக மனப்பாடம் செய்திருப்பேன்.

தற்போது என் மனதில் நிற்கும் குறள்கள்

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப்படும்

ஊடி இருந்தோமாத் தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பாக்கு அறிந்து

வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்
யார் உள்ளித் தும்மினீர் என்று

அதாவது (விளக்கம்) இந்நான்கு குறள்களுக்குமான விளக்கம் ஒரு சிறு கதையாக.

இரண்டு காதலர்கள் (சிறு பிரச்சனையால் ) (ஊடலில்) ஒருவருடன் ஒருவர் கதைக்காமல் நீண்ட நேரம் இருக்கிறார்கள். (அருகருகில்) இருவருக்கும் சிறு சங்கடம் நீண்ட கதைக்காமல் இருப்பதால், எனவே இதை நீள விடாமடல் யாராவது ஒருவர் முதலில் கதைப்போம்என இருவரும் மனதளவில் நினைத்திருந்தும் இருவருக்கும் இன்னோர் பிரச்சனை. அதாவது

காதலனுக்கு தான் முதலில் கதைப்பதா? ஏன்கிற(“குஷிபிரச்சனை. அகம்புடிச்ச கழுதை ஈகோ)

காதலியின் பிரச்சனை வேறு, அதாவது காதலி தமிழிலக்கியம் படித்தவள்.

தமிழிலக்கியங்களிலே காதலர்கள் தொடர்பான ஒரு விடயம் இருக்கிறதாம். அதாவது எந்தப் போட்டியாக இருந்தாலும் வெற்றி பெறுபவர் தான் வெற்றியாளர் ஆனால் காதலில் அதுவும் ஊடலில் தோல்லி அடைபவர் தான் வெற்றியாளர். எனவே இதன் படி தான் முதலில் கதைத்து ஊடலில் தோற்று தான் வெற்றிபெற்றால் காதலன் தோற்றுவிடுவான். காதலன் தோல்வியடைவது காதலியால் தாங்க முடியாது. எனவே அவளும் முதலில் கதைக்க தயங்குகிறாள். (இப்படியான நல்லெண்ணம் கொண்டகாதலிகள்என்கிற ஜந்துக்கள் லெமூரியா கண்டத்துடனேயே அழிந்துவிட்டனவாம்.)

எனவே யார் முதலில் கதைப்பது

காதலனுக்கு ஒரு யோசனை பிறந்தது தான் முதலில் தும்மினால் காதலி நூறு நூறு எனச் சொல்லுவாள் எனவே காதலி முதலில் கதைத்தவளாகுவாளென

(அதாவது அக்காலத்தில் ஒருவர் தும்மினால் அருகிலிருப்பவர் நூறு நூறு எனச் சொல்லும் வழக்கம் அப்படிச் சொன்னால் ஆயுள் கூடும் என்கிற மூட நம்பிக்கை.)

இதன் படி காதலன் தும்மியாயிற்று காதலி முதலில் கதைத்தவளாகிறாள். சட்டென காதலி அழத்தொடங்கிவிட்டாள். காரணம் யாதென காதலனுக்கு புரியவில்லை.

நீங்கள் நினைக்கலாம் காதலனை தோற்கடித்து விட்டேனே என்கிற நல்லெண்ணத்தில் அழுகிறாள் என நிச்சயமாக அப்பிடியில்லை

காதலன் தும்மியது, வேறொருத்தி காதலனை நினைத்ததால் தான் என எண்ணி அழுகிறாள்.
(எல்லா காதலிகளும் அறிமுகமாவது நல்லாத்தான் பிறகு தான் வில்லியாவது வழமையான தமிழ் சினிமா)

எனவே யார் அவள் என்றெண்ணி எல்லா பெண்களுக்கும் உரிய உயரிய பண்பானசந்தேகபுத்தியால் அழுகிறாள்.

பார்த்தீர்களா ! சிங்கங்களே உங்களுக்கு தும்முவதால் எவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகும் என பார்த்தீர்களா!

ஏதோ அக்காலப் பெண் நீங்கள் தும்மியதால் யாரை நினைத்து தும்மினாய் என கேட்பாள்.

இக்காலப் பெண் நீங்கள் தும்மினால் உங்களக்குஎயிட்ஸ்என ஓடிவிடுவாள்.

ஆதற்காக தும்மல் வரும் போது தும்மாமல் மறைத்து விடாதீர் (காதலி அருகில் இருக்கும் போது)
அப்படி செய்தாலும் இன்னோர் பிரச்சனை

இதோ குறள்

தும்மச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
ஏம்மை மறைத்தீரோ என்று

அதாவது
நீங்கள் தும்மாமல் மறைத்தால் உங்கள் காதலி கேட்பாள் உங்கள் மேலே அன்பு கொண்டவள் உம்மை நினைப்பதை நான் அறிந்து கொள்ளக்கூடாது என்று தானே தும்மலை மறைத்தீர் என…..

எப்புடி….

உண்மையாக காதலன்கள் பாவமய்யா
உங்கள் துன்ப துயரங்களை இப்படியான குறள்களை படிக்கும் போது தான் உணரமுடிகிறது.

எனவே தும்மாதீர்தும்மாதீர்
வலு கவனம் தும்மல் வரும் இடங்களை தவிர்த்து கொள்ளுங்கள். தும்மல் வரும் இடங்கள்
தெகிவளை மிருக்காட்சிசாலை
வெள்ளவத்தை பீச் (புகையிரத புகை)
…………………………….
…………………………………….(தும்மல் வரும் இடங்கள் தெரிந்தவர்கள் வெற்றிடங்களை நிரப்பவும்.)

எனவே சிங்கங்கள் இடங்களை தெரிவு செய்யும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்)

நீ தும்மினால் உன்காதலி உன்னை கைவிடுவாள்
ஆன்றே வேறொருவர் கைபிடிப்பாள்
இது யான் யாத்த குறள்.


11 comments:

கனககோபி சனி, செப்டம்பர் 12, 2009 2:59:00 பிற்பகல்  

//திருக்குறளில் இவ்வாறான அம்சங்களும் இருக்கிறது எனத் தெரிந்திருந்தால் சிங்கம் முதலாம் வகுப்பிலிருந்தே திருக்குறளை தினமும் பயின்றிருக்கும். (5ம், 6ம் வகுப்பு ஆசிரியர்களையும் நான் கடுமையாக சாடுகிறேன். சிறு வயதிலே அகர முதல என்பதை நிறுத்தி இன்பத்துப்பால், காமத்துப்பால் குறள்களை எமக்கு கற்பித்திருந்தால் 1330 குறள்களையும் நான் மிகக் கவனமாக மனப்பாடம் செய்திருப்பேன்.//

அடப்பாவி... அவனா நீ???

சினேகிதி சனி, செப்டம்பர் 12, 2009 6:26:00 பிற்பகல்  

:) தும்முறதுக்கு இவ்வளவு விளக்கமா:) நல்லாத்தானிருக்கு.

கனககோபி புதன், செப்டம்பர் 16, 2009 9:33:00 முற்பகல்  

நண்பா...
தொடர் பதிவொன்றிற்கு அழைத்திருக்கிறேன்...
வந்து கலக்குங்கள்...
http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post_7992.html

ilangan வியாழன், செப்டம்பர் 17, 2009 10:26:00 முற்பகல்  

கனககோபி
யேஸ் நானே தான் எப்புடி....

ilangan வியாழன், செப்டம்பர் 17, 2009 10:28:00 முற்பகல்  

வாங்க சினேகிதி
தும்மலை பற்றி நிறைய அறியக்கிடைத்ததா.... அது போதும் நமக்கு.
அது சரி, நீங்க தமிழ் இலக்கியம் படித்தவரா?

Thinks Why Not - Wonders How வியாழன், செப்டம்பர் 17, 2009 10:23:00 பிற்பகல்  

/*....இப்படியான நல்லெண்ணம் கொண்ட “காதலிகள்” என்கிற ஜந்துக்கள் லெமூரியா கண்டத்துடனேயே அழிந்துவிட்டனவாம்.)..*/

I cant stop laughing.. nice one bro... keep it up...

ilangan வெள்ளி, செப்டம்பர் 18, 2009 11:59:00 முற்பகல்  

to thanks
அண்ணா தமிழில் ஏதாவது சொல்லியிருந்தாலும் நான் மறுமொழிந்திருப்பேன். பராவாயில்ல திட்டினீங்களா? பராட்டினீங்களா என ஒரு முறை தமிழில் பின்னூட்டமிடுங்கள்.

Chandravathanaa வெள்ளி, செப்டம்பர் 18, 2009 6:51:00 பிற்பகல்  

நல்லா எழுதுறீங்கள்.
தும்மலுக்கு அவர்கள் தந்த விளக்கத்தை விட
அதை நீங்கள் இங்கு தந்த விதம் அழகு.

Thinks Why Not - Wonders How வெள்ளி, செப்டம்பர் 18, 2009 8:03:00 பிற்பகல்  

/*... அண்ணா தமிழில் ஏதாவது சொல்லியிருந்தாலும் நான் மறுமொழிந்திருப்பேன். பராவாயில்ல திட்டினீங்களா? பராட்டினீங்களா என ஒரு முறை தமிழில் பின்னூட்டமிடுங்கள்...*/

அண்ணாவா... ஆகா சந்துல நம்மை கிழவனாக்கிடாங்களே...
அங்கிள் எனக்கு இன்னும் 20 தாண்டேல... :D

அச்சோ உங்கள பாராட்டி தான் சொன்னேன்... சிரிப்பை அடக்க முடியவில்லை என்று தான் சொன்னேன்....

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... தங்கள் நற்பணியை தொடரவும்...
:)

ilangan புதன், செப்டம்பர் 23, 2009 12:40:00 பிற்பகல்  

ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் .அப்பிடியே கருத்துரை தந்தது போல் ஒரு ஓட்டும் குத்தியிருக்கலாமே. நான் அரசியல் எழுதுவதில்லை தாராளமாக வோட் போடலாம்.

ilangan புதன், செப்டம்பர் 23, 2009 12:43:00 பிற்பகல்  

Thinks Why Not - Wonders How

//அச்சோ உங்கள பாராட்டி தான் சொன்னேன்... சிரிப்பை அடக்க முடியவில்லை என்று தான் சொன்னேன்....//

ரொம்ப நன்றி சார் பாராட்ட தமிழில் தாங்க திட்டுறதா இருந்தால் இங்கிலீஸ்ல திட்டுங்க

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.