இயற்கையிற்கு புது வரைவிலக்கணம் நயன்தாரா

(சீரியஸ் பதிவு)
இயற்கைக்கு புது வரைவிலக்கணம் வேண்டும்.
காரணம் ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் வாசகங்கள் இவை.

“ இயற்கையை பாதுகாப்போம்”
“ இயற்கைத்தாயை பாதுகாப்போம்”
“இயற்கை இறைவன் தந்த அருங்கொடைகளில் ஒன்று” எனவே இயற்கையை பாதுகாப்போம். இயற்கை அழிவை தடுப்போம்.

தற்காலத்தில் இவ்வாறான வாசகங்கள் மக்களை சென்றடையுமா? என்பது கேள்வி?

தற்காலத்தில்
இயற்கையை தாயிற்கோ, கோயிலுக்கோ உவமித்தல் தகுமா? ( ஆரம்பகாலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மரவழிபாட்டிற்கென ஒரு வேத காலமே இருந்தது)

ஆனால் இப்ப…

அனேக தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் வாழ்வதால், தாய்க்குலங்களையே கவனிக்கமுடியாத நிலையில் எப்படி இயற்கையை பாதுகாப்பது?

“ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு” என்றாகிவிட்ட இந்நிலையில் இயற்கையை, இறைவன் தந்த அருங்கொடை, வரப்பிரசாதம், செல்வம் என்றெல்லாம் கூறுவது ஏற்றுக்கொள்ளப்படுமா?

இயற்கையை பாதுகாப்பதற்காகவென பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவையும் எவ்வகையில் சாத்தியம்? எனவே எனது யோசனைப்படி இயற்கைக்கு புது வரைவிலக்கணமும் உவமையும் தேவை.

எனவே ………….

இயற்கையை நமீதாவுக்கோ, நயன்தாராவுக்கோ ஒப்பிடும் போது நம் இளைஞர்களுக்கு மத்தியில் (எனக்கும்) ஒரு தனிக்கவனம் இயற்கை மீது தோன்றும்.

எனவே கவிஞர்களும் நமீதா, நயன்தாராவை இயற்கை வளங்களை (பூ, மரம், செடி, கொடி, நீர்வீழ்ச்சி, வானம், காற்று, மழை…..) உவமித்து பாடுவதை நிறுத்தி இயற்கை வளங்களை நமீதா, நயன்தாராவுக்கு உவமித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உதாரணத்துக்கு ரம்பாவின் கால்கள் வாழை மரத்தை போல என்று வர்ணிப்பதை தவிர்த்து, வாழை மரம் ரம்பாவின் கால்கள் போன்றது என்று வர்ணித்தால் வாழை மரத்தை வெட்டும் ஒவ்வொரு மனிதனும் ரம்பாவின் கால்களையா நாம் வெட்டுகின்றோம் என்று யோசிப்பான்.

இவ்வாறு உவமித்தால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்.
எனவே ஒவ்வொரு இயற்கை வளங்களை அழிக்கும் மனிதனும் சற்றுச் சிந்தித்து விழிப்புடன் இருப்பான்.

இயற்கை வளங்களை பாதுகாக்கவென புதிய அமைப்புக்கள் உருவாக்கப்படத்தேவையில்லை. தானாகவே இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான அமைப்புகள் உருவாகும் ரசிகர் மன்றங்களின் வாயிலாக.
எனவே இயற்கையை பாதுகாக்க இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொண்டால் சிறப்பு.

நான் உதாரணத்துக்காக சொன்ன நமீதா, நயன்தாரா எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.

ஏனெனில் அண்மையில் “யாழ்தேவி” திரட்டி தொடர்பான சர்ச்சையைப் போன்று அமையாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒருவர் அவசியம் எனவே என்னால் முடிந்த சில பரிந்துரைகளை தருகிறேன் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒருவரை தெரிவு செய்து இயற்கையை அழியாமல் பாதுகாப்போம்.

உங்களால் முடிந்தால் பின்னூட்டம் வழியாக பரிந்துரை செய்து பொதுவான ஒருவரை தேர்வு செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கோலிவூட் பரிந்துரைகள் :
த்ரிஸா, தமன்னா, ஸ்ரேயா, மும்தாஜ், சோனா(வடிவேல்), ஸ்னேகா, ப்ரியாமணி, சானாகான் (புது ரம்பா), பழைய ரம்பா……….

பாலிவூட் பரிந்துரைகள் :
மல்லிகா செராவத், ஸில்பா செட்டி, அசின், ஸ்ருதி ஹாஸன், ஜெனிலியா…….

இலங்கன் வழமைக்கு மாறாக அறிவு பூர்வமாக, உலகை நோக்கிய பார்வையில் சமூக சிந்தனையுடன் எழுதிய பதிவு இது.
பி.கு: என் சுய கௌரவத்தை பாதிக்கும் வண்ணம் போலியான கிசு கிசு செய்திகள் வெளிவருகின்றன போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். http://tamilgopi.blogspot.com

8 comments:

யோ வாய்ஸ் வியாழன், ஆகஸ்ட் 27, 2009 1:10:00 பிற்பகல்  

யப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க. புல்லரிக்கிது

சப்ராஸ் அபூ பக்கர் வியாழன், ஆகஸ்ட் 27, 2009 1:54:00 பிற்பகல்  

முதல் வருகை உங்கள் தளத்திற்குள்... வலைப் பதிவர்கள் சந்திப்பின் மூலமாக அறியப் பெற்ற ஒரு தளம்.இனி அடிக்கடி வருவேன்...

வாழ்த்துக்கள்.. தொடர்ந்தும் எழுதுங்கள்.....

ப.லோகேஸ்வரன் வெள்ளி, ஆகஸ்ட் 28, 2009 11:27:00 முற்பகல்  

//என் சுய கௌரவத்தை பாதிக்கும் வண்ணம் போலியான கிசு கிசு செய்திகள் வெளிவருகின்றன போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். http://tamilgopi.blogspot.com//

unmai thaan nanbaa...

ilangan வெள்ளி, ஆகஸ்ட் 28, 2009 11:44:00 முற்பகல்  

நன்றி யோ வாய்ஸ்
இப்பிடித்தான் அடிக்கடி ஆக்கபூர்வமா சிந்திப்பம். அடிக்கடி நம்ம பக்கம் வாங்க வந்து பின்னூட்டம் அடிங்க

ilangan வெள்ளி, ஆகஸ்ட் 28, 2009 11:44:00 முற்பகல்  

வாங்க சப்ராஸ் அடிக்கடி வாங்க

LOSHAN செவ்வாய், செப்டம்பர் 01, 2009 2:24:00 பிற்பகல்  

ஆகா கற்பனை வளம் பொங்குகிறது.. ;)

நல்ல காலம் பழங்களை விட்டு வைத்தீர்கள்.. வாழ்க உங்கள் இயற்கைப் பற்று..

Thivak செவ்வாய், செப்டம்பர் 01, 2009 7:53:00 பிற்பகல்  

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நண்பா.இயற்கை என்றுமே இயற்கைதான்.ஆனால் இன்றைய நயனும் நமீதாவும் நாளைய நடிகைகளின் வருகையின் பின் மறைந்துவிடும்.இவ்வாறு இயற்கையும் மறைய வேண்டும் என்றால் உங்களுடைய யோசனை மிகவும் அருமையானது. http://thivak.blogspot.com/

ilangan புதன், செப்டம்பர் 02, 2009 10:15:00 முற்பகல்  

ரொம்ப நன்றி லோசன் அண்ணா..
ஏன் என்னைப் போல் சமூக கருத்துள்ள விசயங்களை பலர் எழுதுவதில்லை. எனக்கு இயற்கை மீதிருந்த பற்றாலும் அதை விட நடிகைகள் மீதான அதீத பற்றாலுமே இந்த பதிவு.
ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.